உலகம்

ஏர் இந்தியாவில் பயணித்த நான்கு பேருக்கு மூக்கில் ரத்தக்கசிவு


ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

ஓமன் தலைநகரான மஸ்கட்டிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் காற்றழுத்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் 4 பயணிகளின் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. 3 குழந்தைகள்‌ உள்பட 185 பேர் விமானத்தில் பயணம் செய்த நிலையில், பல பயணிகளுக்கு காது வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 4 பயணிகளுக்கும் விமான நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக‌, கடந்த ஆண்டு‌ செப்டம்பரில் மும்பையிலிருந்து 166 பயணிகளுடன் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இதேபோன்று காற்றழுத்த பிரச்னை ஏற்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்ட சம்பவம் நடந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here