உலகம்

அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழி ஆனது இந்தி


ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில், இந்தி அலுவல் மொழியாக்கப்பட்டுள்ளது.

யு.ஏ.இ எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபி. இங்குள்ள நீதிமன்றங்களில், அரபு மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக உள்ளன. இந்நிலையில், மூன்றாவது அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் நீதித்துறை செயலாளர் யூசுப் சயீத் அல் அப்ரி கூறும்போது, ‘’ ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 26 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

இது, மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம். மற்ற மொழி பேசுவோரும், நாட்டின் சட்டத் திட்டங்கள், நீதிமன்ற நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நீதிமன்றங்களில் மூன் றாவது அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்படுகிறது’’ என்றார். இதன் மூலம், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் தங்கள் பிரச்னைகள் மற்றும் வழக்குகளை இந்தியில் தாக்கல் செய்யலாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here