உலகம்

தூரத்தில் பார்த்தால் ஒன்று.. அருகில் பார்த்தால் வேறொன்று – வைரல் ஓவியம் 


சின்னச் சின்ன பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட மாயத்தோற்ற ஒவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நேரம் நம் கண்கள் பார்ப்பதை நம்மாலே நம்ப முடியாது. Illusion என்று ஆங்கிலத்தில் சொல்லும் மாயத்தோற்றம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். சில 3டி வகை புகைப்படங்கள் அச்சு அசலாக உண்மை போலவும் காட்சி அளிக்கும். ஆனால் அது வெறும் புகைப்படங்களாகவே இருக்கும். இப்படி மாயத்தோற்றத்தில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஓவியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த ஓவியம் இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. தாமஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஓவியத்தை எப்படி உருவாக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஒரு ஆணின் முகம் போன்ற இந்த வைரல் ஓவியத்தை தாமஸ் உருவாக்கித்தான் இருக்கிறார். 

முன் புறத்தில் நின்று பார்த்தால் பல வகையான வண்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியத்தை போல் தெரிகிறது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், பல வகையான சின்னச் சின்ன பொருட்களை வைத்து இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. 

உடைந்த பொம்மைகள், பழைய புகைப்படங்கள், மீன் வலை போன்ற பழைய பொருட்களை வைத்தே இந்த மாயத்தோற்றமான ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஓவியரைப் பாராட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here