உலகம்

திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து பெற்ற ஜோடி!


முட்டாள் என திட்டியதால் திருமணம் ஆகி மூன்றே நிமிடத்தில் கணவனை விவகாரத்து செய்த சம்பவம் குவைத்தில் நடந்துள்ளது

திருமணம் செய்துகொண்ட ஜோடி, தங்களுக்குள் பரஸ்பர புரிதல் இல்லை என்று உணர்ந்தால் இருவரும் முடிவு செய்து விவாகரத்து செய்துகொள்கின்றனர். திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தும் விவகாரத்து வாங்குகிறார்கள். சிலர் ஒரு சில வாரங்களிலேயே பிரிந்து விட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள். இப்படி இருக்க குவைத்தில் ஒரு ஜோடி திருமணமாகி 3 நிமிடத்திலேயே விவாகரத்து செய்துள்ளது. உலக வரலாற்றில் அதிவேக விவகாரத்து இது தான் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

குவைத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி தனது திருமண பதிவுக்காக நீதிபதி முன்பு காத்திருந்துள்ளனர். திருமண பதிவுகளுக்கான கோப்புகளை சரி பார்த்த நீதிபதி அவர்களை திருமண ஒப்பந்த புரிந்துணர்வில் கையெழுத்திட சொல்லியுள்ளார். இருவரும் கையெழுத்திட்ட அதே நேரம் மணமகளை கிண்டல் செய்த மணமகன், அவரை முட்டாள் என்று கூறியதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மணமகள் உடனடியாக அதே நீதிபதியிடம் இந்த திருமணம் வேண்டாம் என்றும் விவகாரத்து கோருவதாகவும் தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார். வேறு வழியில்லாத நீதிபதி விவகாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

திருமணமாகி வெறும் 3 நிமிடத்திலேயே விவகாரத்து வாங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சிலர் மணமகனுக்கு ஆதரவாகவும், சிலர் மணமகளுக்கு ஆதரவாகவும், இன்னும் சிலர் இருவரையும் கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here