தொழில்நுட்பம்

Tik Tok Ban in TN: தமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடையா? சட்டசபையில் நடந்த சூடான விவாதம்

சென்னை: டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.

இன்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் செயலி டிக்டாக். தற்போது இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக டிக்டாக் இருக்கிறது. இதில் ஏரளாமானோர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண்கள் ஆபாசமாக வீடியோ எடுத்து ஆபாச பாடலுக்கு ஆடி வீடியோ வெளியிடுகின்றனர்.

சட்டசபையில் தமீமுன் அன்சாரி ( மனிதநேய ஜனநாயக கட்சி) இன்று பேசுகையில், டிக் டாக் மூலம் ஆபாச செயல்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாகவும், எனவே, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழிற்நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் தமிழகத்தின் இளைஞர்களின் வாழ்க்கைக டிக்டாக் செயலியால் பாழாகிறது. பலர் தங்களின் எதிர்கால வாழ்க்கையை மறந்து விட்டு டிக்டாக் செயலிலேயே முழ்கி கிடக்கின்றனர்.

இதன் மூலம் சட்டவிரோதமான செயல்களும், ஆபசங்களும் அதிகமாக நடந்து வருகிறது. இந்த செயலியை தடை செய்வது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். உயிரை கொல்லும் விளையாட்டான புளூவேல் கேம் தடை செய்யப்பட்டது போன்று விரைவில் டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.

முன்னதாக, இளைய தலைமுறையினரை சீரழிவுக்கு கொண்டு செல்லும் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த செயலியை கடுமையாக கண்காணிப்பது மற்றும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார்.

மேலும், டிக் டாக் செயலி மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பல்வேறு அமைப்புகளும் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.

வித, விதமாய் வித்தியாசமாய் பல்வேறு காட்சிகளில் இளைய தலைமுறையினர் நடித்து, அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இதற்கும் மேல் ஒரு படி தாண்டி, காவல்நிலையம் வரை சென்று டிக் டாக் செய்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது நினைவிற்குரியது.

Comment here