கிரிக்கெட்

தரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்


டி20 கிரிக்கெட் சர்வதேச தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோற்றது. நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் மட்டும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் சாய்த்தார். 

இந்நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான்(720), இமாத் வாசிம்(705) மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 

இந்திய அணியில் சாஹல் 17, புவனேஸ்வர்குமார் 18வது இடங்களில் உள்ளனர். இந்தத் தொடரில் சரியாக விளையாடாததால் சாஹல் 6 புள்ளிகள் குறைந்துள்ளார். குர்ணால் பாண்ட்யா 39 இடங்கள் முன்னேறி 58வது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 885 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.  இந்திய அணி தரப்பில் முதல் பேரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மட்டும் இடம் பிடித்துள்ளனர். ரோகித் 698 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ராகுல் 677 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர். Source link

Comment here