கிரிக்கெட்

விஜய் சங்கர் அபாரம் ! வெற்றி பெறுமா இந்தியா ?


இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆடினார். அந்த அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்த. இந்திய தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டும் கலீல் அகமது, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய ஷிகர் தவான் முதல் ஓவரிலே 5 ரன்களுக்கு ஆவுட்டானார். அதற்குபிறகு வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விஜய் சங்கரும் ரோகித் சர்மாவும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாப் புறமும் சிதறடித்தனர். 

இதில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் விளாசி 43 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதனால் ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். குறிப்பாக சோதி வீசிய 8வது ஓவரில் விஜய் சங்கர் இரண்டு சிக்சர்கள் விளாசியது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. விஜய் சங்கரும் ரோகித் சர்மாவும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து 75 ரன்கள் விளாசினார்கள். விஜய் சங்கரின் இந்த ஆட்டம் இந்தியாவை வெற்றி இலக்கை நோக்கி செல்ல முக்கியமானதாக அமைந்துள்ளது. 

தற்போது நிலவரப்படி இந்திய அணி 14 ஓவரின் முடிவில் 141 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.    Source link

Comment here