கிரிக்கெட்

நியூசி. சரவெடி: இந்திய அணிக்கு 213 ரன் வெற்றி இலக்கு!


நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய அணிக்கு 213 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சேஹலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆடினார். அந்த அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் சீபெர்ட் 25 பந்தில் 43 ரன்னும் முன்றோ 40 பந்தில் 72 ரன்னும் விளாசினர். கிராண்ட் ஹோம் 16 பந்தில் 30 ரன்னும் மிட்செல் 11 பந்தில் 19 ரன்னும் ராஸ் டெய்லர் 7 பந்தில் 14 ரன்னும் எடுத்தனர்.

இந்திய தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டும் கலீல் அகமது, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. Source link

Comment here