கிரிக்கெட்

அழியும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் -முரளிதரன் கருத்து


டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அழியும் நிலையில் உள்ளதாக முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ‘முரளி’ என்று அழைக்கப்படுபவர் முத்தையா முரளிதரன். இவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஒரு இலங்கை தமிழர். இவர் இலங்கை அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகளில்  விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் தான் முன்னிலையிலுள்ளார். 

Image result for muttiah muralitharan

இவர் 133 டெஸ்ட் கிரிக்கேட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை பந்துவீச்சு விதிமுறை சர்ச்சைகளிலும் முரளிதரன் சிக்கியுள்ளார். எனினும் இதனால் கவனம் சிதராமல் தன் துள்ளியமான பந்துவீச்சை தொடர்ந்து செய்துவந்தார். இவர் கடந்த 2011 கிரிக்கெட் உலக கோப்பையுடன் சர்வேதச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு இவர் சிறுவர்கள் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார்.

அவர் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது அழியும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் “தற்போது உள்ள வீரர்கள் வணிகம் சார்ந்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வணிகம் சார்ந்த மனப்போக்கை கொண்டுள்ளனர். அத்தோடு தற்போது இருக்கும் வீரர்களுக்கு தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் இல்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தடுப்பு ஆட்டம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய அம்சம். அது வீரர்களிடம் இல்லாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் படிப்படியாக அழிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Image result for muttiah muralitharan

அத்துடன் இந்தப் பேட்டியில் முத்தையா முரளிதரன், “இந்திய அணியின் விரேந்திர சேவாக் தான் நான் பார்த்து பயந்த ஆட்டக்காரர். ஏனென்றால் சேவாக் உங்களை எளிதில் பந்துவீச அனுமதிக்கமாட்டார். மேலும் இந்திய அணியின் பும்ராவை பார்த்தால் எனக்கு இலங்கை அணியின் மலிங்கா நினைவுக்கு வருவார். பும்ரா இந்திய அணியில் இருப்பது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலம்” எனத் தெரிவித்துள்ளார். Source link

Comment here