கிரிக்கெட்

2வது டி20 போட்டி : இந்தியாவிற்கு 159 ரன்கள் இலக்கு | INDvsNZ 2nd T20


இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 158 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா-நியூஸிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான, டிம் செஃபெர்ட் மற்றும் காலின் முன்றோ ஆகியோர் தலா 12 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து வெளியேறினர். 

இதையடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 20 (17) மற்றும் டெரில் மிட்செல் 1 (2) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த  கிராண்ட்ஹோம்  அதிரடியாக விளையாடி, 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மற்றொருபுறம் நிதானமாக விளையாடிய ராஸ் டைலர் 42 (36) ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Source link

Comment here