கிரிக்கெட்

“கோலி உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன்” – ரவிசாஸ்திரி நெகிழ்ச்சி


இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உருவத்தில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானை பார்ப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், கேப்டனாக விராட் கோலியும் இருக்கும் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாததால், அணித்தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் சிக்கல் இன்றி செல்கிறது. இந்நிலையில் கோலி குறித்து பேட்டியளித்துள்ள ரவிசாஸ்திரி, “நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரது தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாருமில்லை. பயிற்சிப் பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் இல்லை.

இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நான் நினைக்கிறேன். கோலி பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவு படுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்தில் கோலி பல மடங்கு முன்னேற்றம் அடைந்துவிட்டார். அவர் மேலும், மேலும் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் வென்றதை குறிப்பிடலாம்” என்று கூறினார்.     



Source link

Comment here