கிரிக்கெட்

“எப்போதாவது தான் சொதப்பும்.. எப்போதுமே இல்ல” – அம்பத்தி ராயுடு


எப்போதுமே அனைவரும் சொதப்புவார்கள் என நினைக்க வேண்டாமென்று இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி வெற்றி தொடர்பாக பேசிய ராயுடு, “சிறப்பான பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. 18 (9.3 ஓவர்கள்) ரன்னில் 4வது விக்கெட் விழந்த பிறகு, 30 ஓவர்களை கடந்த பின்னர் தான் (116/5 – 31.5) அடுத்த விக்கெட்டை இழந்தோம். 50 ஓவர்கள் முழுவதும் விளையாட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் திட்டமாக இருந்தது. குறிப்பாக 4, 5, 6வது இடத்தில் விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு என்பது கடினமான சூழ்நிலையில் தான் கிடைக்கும். எப்போதுமே அனைவரும் சொதப்புவர்காள் என நினைக்க வேண்டாம். ஹாமில்டனில் நடந்ததுபோல எதாவது ஒருபோட்டியில் (கடந்த போட்டி) தான் சொதப்பும். மேலும் பல சவால்களை எதிர்காலத்தில் எதிர்கொள்வோம். எங்கள் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பானது” என்றார். 

முன்னதாக, இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பின்னர் வந்த இளம் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அம்பத்தி ராயுடு 90 (113), ஹர்திக் பாண்ட்யா 45 (22) விஜய் சங்கர் 45 (64), கேதர் ஜாதவ் 34 (45) ரன்கள் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஜேம்ஸ் நீஷம் 44 (32), கேப்டன் கெயின் வில்லியம்சன் 39 (73) ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக முகமது ஷமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here