பாஜக

பாஜகதான் வெற்றிபெறும்; மோடி தான் மீண்டும் பிரதமர் – உ.பி. துணை முதலமைச்சர்


மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என உத்திரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில் மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என தெரிவித்துள்ளார். மேலும் 

Image result for keshav prasad maurya

“பாஜக கடந்த 2014 தேர்தலில் பெற்ற வெற்றியை விட இந்த 2019 தேர்தலில் அதிக தொகுதிகளை பிடிக்கும் என நம்புகிறேன். இந்த முறை தேர்தலில் பாஜக 300 தொகுதிகளில் வெற்றியடையும் என எதிர்பார்க்கிறேன். இந்த 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி  400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெரும். மோடி தான் மக்களின் தலைவர். அவர் தான் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர். அவர் தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர். மோடியின் தலைமை பண்பை வேறு எவராலும் ஈடுசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Image result for Modi

மேலும் பாஜக இந்த 2019 தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைக்கும். பாஜக பெரும்பான்மையை பெறாது என நினைப்பவர்களின் கனவில் தான் அது  நிறைவேறும். இந்த முறை பாஜக உறுதியாக பெரும்பான்மையை பெறும்.  மோடி அவர்கள் இரண்டுவாது முறையாக அமோக வெற்றி பெற்று இந்திய நாட்டின் பிரதமர் ஆவார்”என தெரிவித்துள்ளார்.Source link

Comment here