பாஜக

தமிழகத்தில் இதுவரை பாஜக அமைத்த கூட்டணி பயணம்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி இறுதியாகி இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படும் நிலையில், இதற்கு முன்பு தமிழகத்தில் பாஜக எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது என்பதை பார்க்கலாம்.

1998ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்தான் பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக தமிழகத்தில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்தது. 1998 பொதுத்தேர்தலை பெரிய கூட்டணியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு, 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஓராண்டு கூட இது நீடிக்கவில்லை. 

மத்தியில் வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை அதிமுக திரும்ப பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து 1999ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த முறை திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது. 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திமுக – பாஜக கூட்டணி முறிந்தது. 

2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தன. ஆனால் இந்த அணிக்கு படுதோல்வியே கிடைத்தது.

இதன் பிறகு 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் மதிமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. அதில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2019 நாடாளுமன்றத்தேர்தலில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.Source link

Comment here