அரசியல்

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அகிலேஷ்


உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். 

இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவில், லக்னோ விமான நிலையத்தில், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக தான் தடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். அந்தப் படமும் அகிலேஷ் விமானத்தில் ஏறுவது போன்றும், மேலே போலீசார் நின்று கொண்டு அவரை நிறுத்துவது போலவும் இருந்தது. 

அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அகிலேஷ் செல்ல இருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள மற்றொரு படத்தில், போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்று உள்ளது. 

                

மாணவர் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அலகாபாத் பல்கலைக் கழகம் தரப்பில் அகிலேஷ் யாதவ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக லக்னோ போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகிலேஷ் கலந்து கொள்வதால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதை காரணம் காட்டி இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.Source link

Comment here