அரசியல்

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | AIADMK-BJP electoral alliance


மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் , தங்களுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. தோழமையுடன் உள்ள சிறிய கட்சிகளும் போட்டியிட விரும்புவதால் இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவிடம் பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக கேட்கும் 10 தொகுதிகளில், பெரும்பாலானவை அதிமுகவுக்கு செல்வாக்கு நிறைந்த தொகுதிகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பாரதிய ஜனதாவுக்கு 6 இடங்களை மட்டுமே அளிக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.Source link

Comment here