அரசியல்

அதிமுக விருப்ப மனு விநியோகம் நீட்டிக்கப்பட வாய்ப்பு


மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் வரும் 19-ஆம் தேதி‌ வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. விருப்ப மனுக்களை வாங்கிய ஏராளமானோர், அதனைப் பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். விருப்ப மனுக்கான விநியோகம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது விருப்ப மனு விநியோகத்தை பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலையில் வெளியாகும் எனத் தெரிகிறது.Source link

Comment here