அரசியல்

சட்டப்பேரவை தேர்தல் வழக்கு – திருமாவளவன் நேரில் ஆஜராக உத்தரவு 


காட்டுமன்னார்கோயில் தேர்தல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜராகி சாட்சியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 87 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். 

Related image

அதில் தனது தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல்  நடத்தப்படவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கையின்போது, தனது கட்சி பூத் முகவர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். 

Image result for சென்னை உயர் நீதிமன்றம்

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை நிராகரிக்க கோரி எம்.எல்.ஏ. முருகுமாறன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணை தொடர்ந்து நடைபெறும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியம் அளிப்பதற்காக, மனுதாரர் என்ற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பிப்ரவரி 15ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.Source link

Comment here