2019 தேர்தல்அரசியல்

முட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் – தேர்தல் கூட்டணியை பாதிக்குமா ?


இந்தியாவில் இத்தனை நாட்களாக சாதி ரீதியான ஏற்றத்தாழ்வின் மூலம் இட ஒதுக்கீடு இருந்து வந்த நிலையில், மோடி அரசு சரித்திரம் படைக்கும் வகையில் முதல் முதலாக பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் பொதுப்பிரிவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

இந்த விஷயத்தில் ரங்கராஜனின் கருத்துக்களை மிக ஆணித்தரமாக மறுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான தாமஸ் பாண்டியன். இதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி வாய் திறந்திருக்கும் டி.கே.ரங்கராஜன், “முற்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதுதான் இடது சாரிகளின் கருத்தாக இருந்து வருகிறது. மார்க்சிஸ்டுகள் இதில் எப்போதும் தெளிவாக இருக்கிறோம்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். புதுவையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஒரு பக்கத்தில் ‘பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்பவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.’ என்று இருக்கிறது. இ.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைத் திட்டமும் இதைத்தான் சொல்கிறது.

ஆனால் இப்போது தா.பாண்டியனே அதை எதிர்க்கிறார் என்றால் எப்படி? என்னைப் பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் தா.பாண்டியன் தனது சொந்தக் கருத்தைத்தான் பதிந்துள்ளார், அது அவரது கட்சியின் கருத்தில்லை.” என்று கூறியதாக ஆசியானெட் தமிழ் குறிப்பு தெரிவிக்கிறது. எனவே இரு கம்யூனிஸ்டுகளுக்குள்ளும் உருவாகியிருக்கும் இந்த உரசல், தேர்தல் நேரத்தில் பின்னடைவை உருவாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை இது பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post முட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் – தேர்தல் கூட்டணியை பாதிக்குமா ? appeared first on கதிர்.

Source link

Comment here