அரசியல்

அதிமுகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி : அமைச்சர் ஜெயக்குமார்


மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முந்தய நிலை போல் தலைமை ஏற்படும். தொகுதி பங்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் நலன் கருதி எங்கள் தலைமையை ஏற்க வருகின்ற கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம்” என்று கூறினார். 

Related image

இதனைதொடர்ந்து காங்கிரஸில் ராகுல் காந்தி தலைமை ஏற்றது பற்றியும் மற்றும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வழங்கியது பற்றிய கேள்விக்கு அது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான பிரச்சினையை காட்டுகிறது. தமிழ்நாடு பொருத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் அலைதான் வீசுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் 37 இடங்களில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தமிழக முதல்வர், தமிழக நலன் வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடியிடம் போராடிப் பெற்று வருகிறார். மேலும் மேகதாது பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். ஆகவே 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.Source link

Comment here