2019 தேர்தல்அரசியல்

மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் இந்தியாவின் வளர்ச்சி கவலைக்குரியதாக மாறிவிடும் : சிஸ்கோ நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சேம்பர் பேட்டிAmazon Great Indian Sale - 2019

பிரதமர் மோடி மீண்டும் ஒருவேளை பிரதமராக முடியாவிட்டால் இந்தியா தற்போது பெற்று வரும் வேகமான  வளர்ச்சிக்கு தடை ஏற்படும் என்றும், அதனால் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் என்றும் பிரபல சிஸ்கோ நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், அமெரிக்காவின் பிரபல தொழிலதிபருமான ஜான் சேம்பர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள இந்திய பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் “நீண்ட காலத்துக்குப் பின் இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் கிடைத்துள்ளார். அவர் வேகமான வளர்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை சர்வ வல்லமை பொருந்திய நாடாக கொண்டுவரும் திறன் படைத்தவர். ஒரு வேளை அவர் பிரதமராக தேர்ந்தெடுக்க முடியாமல் போனால் இந்தியா மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கும். அவர் மிக சரியான பொருத்தமான பிரதமாக திகழ்கிறார்” என்றார்.

Advertisement
Amazon Great Indian Sale - 2019

வாஷிங்கடனில் நேற்று நடை பெற்ற அமெரிக்க – இந்திய வர்த்தக ஒத்துழைப்பு சபையில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் “வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி தோற்றுப்போனால் அவர் என்ன செய்வார் : என்று கேட்டார். அதற்கு ஜான் சேம்பர் பதில் கூறுகையில்” அவர் வழக்கம் போல அதிகாலையில் எழுந்து இந்தியாவின் எதிர்காலம் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பார் ” என்றார். மேலும் அமெரிக்கா – இந்தியா நட்புறவில் இது ஒரு பொற்காலம் என்றும் மோடியின் பங்களிப்பு மிகவும் சமர்த்தானது என்றும் புகழ்ந்துரைத்தார்.

Source link

Comment here