2019 தேர்தல்அரசியல்

7 டெல்லி எம்.பி தொகுதிகளில் 6 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும்: பிரதமர் மோடி ஆட்சியில் நாடு பாதுகாப்பாக உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!Amazon Great Indian Sale - 2019

தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவில் அதிக லோக்சபா தொகுதிகளை பா.ஜ.க வெல்லும் என்றும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும் என்றும், ஆட்சியில் சில அதிருப்தி இருந்தாலும் பொது நன்மைகள் அதிகம் கிடைத்துள்ளதாகவும், நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் எனவே மோடி அரசுக்குத்தான் தாங்கள் மீண்டும் வாக்களிக்கப் போவதாகவும்  நியூஸ் நேஷன்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய புதியக் கருத்துக்கணிப்பில் வாக்காளர்களின் எண்ணம் பிரதிபலித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல செய்தி நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நியூஸ் நேஷன்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியானாவில் உள்ள 17 தொகுதிகளில் இந்தக் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement
Amazon Great Indian Sale - 2019

வரும் லோக் சபா தேர்தலில் ஹரியானாவில் பாஜக 30 சதவீத ஓட்டுகளையும் காங்கிரஸ் 29 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் பா.ஜ.க 5 தொகுதிகளையும் காங்கிரஸ் 3 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, டெல்லியில் பெரும்பாலோனோர் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க போவதாகவும், பா.ஜ.க பொதுவான பல நன்மைகளை செய்திருப்பதாகவும், நாடு பா.ஜ.க ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கருத்து  தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆம் ஆத்மி கட்சிக்கு 31 சதவீதம் பேரும் வாக்களிக்கப் போவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியை மட்டும் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு கட்சிகளுமே கூட்டணியில்லை என்று பரஸ்பரம் அறிவித்துவிட்ட நிலையில் டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அந்தப் பலனை பா.ஜ.க பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ் நேஷன்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Input Credits – Asianet Tamil

Source link

Comment here