2019 தேர்தல்அரசியல்

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட இல்லை : அகிலேஷும், மாயாவதியும் தலா 37 தொகுதிகள் பங்கீடுAmazon Great Indian Sale - 2019

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் உ.பியில் ஆளுக்கு சரி பாதி தொகுதிகளை பிரித்துக் கொண்டு கூட்டணியை துவக்கியுள்ளன.

இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வருகிறது. இந்நிலையில் பா.ஜ.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தி.மு.க தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுல் முன்னிலையிலேயே மு.க.ஸ்டாலின் ராகுல் தான் எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் என்றார்.

Advertisement
Amazon Great Indian Sale - 2019

ஆனால் மற்ற எதிர் கட்சிகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. எதிர் கட்சித் தலைவர்களில் நிறைய பேருக்கு பிரதமர் பதவி மீது ஆசை உள்ளதால் ஜெயித்த பிறகு பார்க்கலாம் என கூறுகின்றனர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணியில் இருப்பதாக காட்டி கொண்டிருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகி தனித்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக டில்லியில் நடந்த கூட்டத்தில், உ.பி.யில் மொத்தமுள்ள 74 லோக்சபா தொகுதிகளில், இரு கட்சிகளும் பாதிக்குபாதி (37) பங்கீட்டு கொள்வது எனவும், கைகோர்த்து தேர்தலை சந்திக்கவும் இரு கட்சிகளும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்., தலைமையை ஏற்க இரு கட்சிகளும் தயாராக இல்லை என தெரியவந்துள்ளது.

Source link

Comment here