கல்வி & வேலைவாய்ப்பு

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலை டிஆர்பி அறிவிப்பு!


டிஆர்பி (TRB) – யில் பல்வேறு ஆசிரியர் பணிகளுக்கான 152 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. B.T அசிஸ்டெண்ட்ஸ்
2. செகண்டரி கிரேடு அசிஸ்டெண்ட்ஸ்
3. P.G அசிஸ்டெண்ட்ஸ்
4. ஸ்பெஷல் டீச்சர்ஸ்
5. அசிஸ்டெண்ட் புரொபசர்ஸ்

காலிப்பணியிடங்கள்:
1. B.T அசிஸ்டெண்ட்ஸ் – 116
2. செகண்டரி கிரேடு அசிஸ்டெண்ட்ஸ் – 12 
3. P.G அசிஸ்டெண்ட்ஸ் – 03
4. ஸ்பெஷல் டீச்சர்ஸ் – 17
5. அசிஸ்டெண்ட் புரொபசர்ஸ் – 04

மொத்தம் = 152 காலிப்பணியிடங்கள்

சம்பளம்:
1. B.T அசிஸ்டெண்ட்ஸ் – மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை
2. செகண்டரி கிரேடு அசிஸ்டெண்ட்ஸ் – மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
3. P.G அசிஸ்டெண்ட்ஸ் – மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை
4. ஸ்பெஷல் டீச்சர்ஸ் – மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
5. அசிஸ்டெண்ட் புரொபசர்ஸ் – மாதம் ரூ.57,700

தேர்வு செய்யப்படும் விதம்:
1. B.T அசிஸ்டெண்ட்ஸ் என்ற பணிக்கு, TNTET paper II தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
2. செகண்டரி கிரேடு அசிஸ்டெண்ட்ஸ் என்ற பணிக்கு, TNTET paper I தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களை www.trb.tn.nic.in – என்ற இணையத்தில் சென்று பூர்த்தி செய்யலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் :

1. B.T அசிஸ்டெண்ட்ஸ் – என்ற பணிக்கு எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.
2. செகண்டரி கிரேடு அசிஸ்டெண்ட்ஸ் – என்ற பணிக்கு எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.
3. P.G அசிஸ்டெண்ட்ஸ் – என்ற பணிக்கு எஸ்.சி மற்றும் எஸ்.சி.ஏ பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.
4. ஸ்பெஷல் டீச்சர்ஸ் – என்ற பணிக்கு எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.
5. அசிஸ்டெண்ட் புரொபசர்ஸ் – என்ற பணிக்கு எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுதகவல்கள், www.trb.tn.nic.in – என்ற இணையதளத்தில் விரைவில் வெளியாகும்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here