கல்வி & வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலை!


பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியில், சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ) என்ற பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி:

சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ)

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 15 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019

ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.02.2019

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் = ரூ.600
எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர் = ரூ.100

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைன் பணப் பரிவர்த்தன முறையில் மட்டுமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியும்.

செலுத்திய தேர்வுக் கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

வயது வரம்பு: (01.12.2018 க்குள்)
25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:
வருட சம்பளமாக ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ) என்ற பணிக்கு, சார்ட்டர்ட் அக்கவுண்ட் (CA) / எம்.பி.ஏ (Finance) / Master in Finance control / Master in Management Studies / PGDM (Finance) என்ற பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 2 வருட பணி சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எஸ்பிஐ வங்கியின் https://bank.sbi/careers (அல்லது) https://www.sbi.co.in/careers/ – என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுமையான தகவல்களை பெற
https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191853-ADV-ENG.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.Source link

Comment here