சினிமா

மார்ச்சில் ஆர்யா- சாயிஷா திருமணம்..! | Arya to marry Sayesha in March


நடிகர் ஆர்யா- சாயிஷா திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஆர்யா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர். அப்படித்தான் நடிகை சாயிஷாவும், ஆர்யாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்றும் தகவல் பரவியது. ஆனால் அவர்கள் இருவரும் இந்த செய்தியை உறுதி செய்யவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

இந்நிலையில் காதலர் தினமான இன்று, நடிகர் ஆர்யா தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசியுடன் தானும், சாயிஷாவும் வரும் மார்ச்சில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் ஆர்யா, உங்களின் அன்பும், ஆசியும் எப்போதும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமண தேதியை அவர் குறிப்பிடவில்லை. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது.

பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்திதான் சாயிஷா. ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.Source link

Comment here