சினிமா

நிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்!


’சலீம்’ பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கும் படத்தில் சசிகுமார் நடிக்க இருக்கிறார்.

விஜய் ஆண்டனி நடித்த ’சலீம்’ படத்தை இயக்கியவர் என்.வி.நிர்மல் குமார். அடுத்து அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள ’சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கியுள்ளார்.  இப்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் உதயசங்கர் ஹீரோ. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்.

இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். எலெக்ட்ரா என்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதை முடித்துவிட்டு சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார் நிர்மல் குமார். 

தற்போது சுசீந்திரன் இயக்கும் ’கென்னடி கிளப்’, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களில் நடித்து வருகிறார், சசிகுமா ர். இதில் ’கென்னடி கிளப்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிகிறது. இதையடுத்து சுந்தர். சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கதிர்வே லு இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதை முடித்துவிட்டு நிர்மல்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 


 Source link

Comment here