சினிமா

நடிகை ’ஜாங்கிரி’ மதுமிதாவுக்கு நாளை திருமணம்


காமெடி நடிகை ’ஜாங்கிரி’ மதுமிதாவுக்கு நாளை திருமணம் நடக்கிறது.

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. இந்த படத்தில் அவரை ஜாங்கிரி என்று சந்தானம் அழைப்பார். இதையடுத்து ஜாங்கிரி மதுமிதா என அழைக்கப்படுகிறார்.

தொடர்ந்து, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஷ்மோரா, விஸ்வாசம் உட்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கும் இவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணம் சென்னை கோயம்பேடில் நாளை காலை நடக்கிறது. மோசஸ் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். 

இதுபற்றி மதுமிதா கூறும்போது, ’‘என் தாய் மாமா மகன் தான் மோசஸ் ஜோயல். இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் இது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்’’ என்றார் மதுமிதா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here