சினிமா

காதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர்


‘என்ஜிகே’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கிய நிலையில் இன்று அப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம்‘என்ஜிகே’. அதாவது‘நந்த கோபால குமரன்’ சுருக்கம்தான் இது. இதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் நாயகனாக சூர்யா நடித்துள்ளார். மேலும் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளனர். படத்தில் மன்சூர் அலிகான், பாலாசிங் எனப் பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியிருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது இயக்குநர் செல்வராகவன் உடல்நிலை மோசமானதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அவரது உடல்நிலை இயல்புக்கு திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் மன்னிப்பு கூறியிருந்தார்.

இப்போது ‘என்ஜிகே’வின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதால், சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்து கொடுத்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் காதலர் தினமான இன்று வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ‘என்.ஜி.கே’ படத்தின் டீசர் இன்று வெளியாகி காதலர் தினத்தின் பரிசாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Source link

Comment here