சினிமா

"நான் ஒன்றும் தரம்தாழ்ந்து போய்விடவில்லை" நடிகர் கருணாகரன் விளக்கம்


பொது நலன் கருதி படத்தை   புது முக இயக்குனர் சீயோன் இயக்கியிருக்கிறார் ,இந்த படத்தின் கரு வட்டி தொழில் செய்யும் கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது,இந்த படத்தின் இசை வெளிட்டு விழா பிப்ரவரி 7 ஆம்  தேதி நடந்தது. கருணாகரன்  பின்னணி குரல் கொடுப்பதற்கு முன்பு தனக்கான  மொத்த  சம்பளம் 25 லட்சம் ரூபாயை  பெற்றுக்கொண்ட பின்பும்  கூட அவர் இசைவெளிட்டு விழாவில் கலந்து கொள்ள வில்லை என்று கருணாகரன் இசை வெளிட்டு  விழாவில் கலந்து  கொள்ளாததை  பற்றி  இயக்குனரும், தயாரிப்பாளரும் தங்களது எண்ணத்தை காட்டமாக முன் வைத்தனர்.  

 

அதன் பிறகு பொது நலன் கருதி படத்தின் இயக்குனர் சீயோனும் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ஆனந்தும் நடிகர் கருணாகரன் மீது காவல் நிலையத்தில் புகார்  ஒன்றினை  ஆடியோ  ஆதாரத்துடன் அளித்தனர் , அதில்  கருணாகரன்  எங்களை கந்து வட்டி கும்பலை வைத்து மிரட்டியதாகவும், எங்களை  தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும்  அதற்கான ஆதாரத்தோடு சமர்ப்பித்தனர். இந்த ஆடியோ சமீபத்தில் வெளியாகி  சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது . 

இப்பொழுது இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் வண்ணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுருக்கிறார்  கருணாகரன்  
அவர் அதில் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும்  பொய் என்றும் , படத்தின் இசை வெளியீட்டு விழா  பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கவிருப்பதாக என்னிடம்  பிப்ரவரி  1 ஆம் தேதி  இரவு 9.30 மணிக்கு கூறியதாகவும் அப்போழுதே பணிகளின் நியமித்தமாக  என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார் . இந்த படத்தில் உயிரை  பணயம் வைத்து சில  காட்சிகளில்   நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் . 

கடனால் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நான் ,கந்து வட்டி கும்பலை வைத்து மிரட்டும் அளவுக்கு  ஒன்றும் தரம் தாழ்ந்து போய்  விடவில்லை என்றும் ,நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை என்றும்  கூறியுள்ளார்,அதுமட்டுமல்லாமல்  என்னுடைய  தந்தை  மக்களை பாதுகாக்கும் துறையில்  பணிபுரிந்து   விருது  பெற்றிருப்பதாகவும்  என்னுடைய சினிமா பயணமே புது முக  இயக்குநர்களால்தான்  தொடங்கியது  அப்படி இருக்கையில் நான் வேண்டு மென்ற  விழாவில் கலந்து கொள்ள வில்லை என்று கூறியிருப்பது  வருத்தம் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here