சினிமா

ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இந்தி ஹீரோ அஜய்தேவ்கன்!


ராஜமவுலி இயக்கும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இந்தி ஹீரோ அஜய்தேவ்கன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார். சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பாகுபலி’ படங்கள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து ராஜமவுலி இயக்கும் படத்துக்கு ’ஆர்ஆர்ஆர்’ என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர். சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாள மொழி களில் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

மற்றொரு பவர்புல் கேரக்டரில் நடிக்க, பிரபல இந்தி ஹீரோ அஜய்தேவ்கனிடம் பேசியுள்ளனர். அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக முதலி ல் கூறப்பட்டது. இதனால் படக்குழு அக்‌ஷய்குமாரிடம் பேசிவருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதில் அஜய்தேவ்கன் நடிக்கிறார் என்று மும்பையில் இருந்து வெளிவரும் டிஎன்ஏ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

அந்த செய்தியில், ‘’இந்தியிலும் இந்தப் படம் உருவாவதால் இருப்பதால், இந்தி ஹீரோ ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் ராஜமவுலி விரும்பினார். அதனால் அஜய்தேவ்கனிடம் பேசியுள்ளனர்’’ என்று கூறப்படுகிறது. ஆனாலும் அஜய்தேவ்கன் தரப்பிலோ, ராஜ மவு லி தரப்பிலோ இதுபற்றி உறுதி செய்யப்படவில்லை.

ஹீரோயின்களாக, பரினீதி சோப்ரா, ஆலியா பட் நடிப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் தான் நடிக்கவில்லை என்று ஆலியா பட் மறுத்துள் ளார்.  படத்தின் கதை சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

 Source link

Comment here