சினிமா

‘மொரட்டு சிங்கிள்’ விஜயை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்


தொலைக்காட்சி தொகுப்பாளரும், ஆர்.ஜேவும் ஆன விஜய்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தனியார் வானொலியில் பிரபல ஆர்.ஜே-வாக இருப்பவர் விஜய். தற்போது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ளார். இவர் ரேடியோவில் பணிபுரிந்த போது ‘மொரட்டு சிங்கிள்’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசியிருந்த இவர், தனக்கு விரைவில் திருமணம் ஆகவுள்ளதாக தெரிவித்திருந்தார். மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், மொரட்டு சிங்கிள் குடும்பஸ்தனாக தயாராகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் கூறியது போலவே, இன்ஜினியர் மோனிகாவை திருமணம் செய்துள்ளார். நேற்று இவர்களின் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இவர்கள் திருமணத்தின் வரவேற்பு நடந்தது. அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here