சினிமா

காமெடி படத்தில் ஜோதிகாவுடன் இணையும் யோகிபாபு, ரேவதி!


36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி படங்களைத் தொடர்ந்து ‘குலேபகாவலி’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் காமெடி படத்தில் நடிக்கிறார் ஜோதிகா. 

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

 2D என்டர்டெயின்மென்ட் சார்பில், நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. சூர்யா, கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here