சினிமா

நடிகர் கருணாகரன் மீது தயாரிப்பாளர், இயக்குனர் புகார்!


நடிகர் கருணாகரன் தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, பொது நலன் கருதி படத்தின் இயக்குனர் சீயோன், இணை தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியுள்ள படம், ‘பொது நலன் கருதி’. சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனு சித்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஏவிஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் சீயோன், படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கருணாகரன், புரமோஷனுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பரபரப்பு புகார் கூறினார்.

இந்நிலையில் படத்தின் துணைத் தயாரிப்பாளரும் இயக்குனர் சீயோனும் நடிகர் கருணாகரன் மீது, சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில், ‘’எங்களின் ’பொதுநலன் கருதி’ படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் எந்த புரமோஷனுக்கும் அவர் வரவில்லை. இதனால் டிரைலர் வெளியீட்டு விழாவில், அதை மனவேதனையுடன் பதிவு செய்தார். இந்நிலையில் ஆம் தேதி படத்தின் சிறப்பு காட்சி முடிந்து அலுவலகத்துக்கு இயக்குனர் சென்றுகொண்டிருந்த போது, நடிகர் கருணாகரனால் அனுப்பப்பட்ட ஆட்கள், அவரைத் தாக்க முயற்சித்தனர்.

படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற காரணத்தால் இதை இயக்குனர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் இணை தயாரிப் பாளர் விஜய் ஆனந்துக்கு நடிகர் கருணாகரன் கடந்த 7 ஆம் தேதி போன் செய்து, தரகுறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here