சினிமா

சீரியல் நடிகை மர்ம மரணம்? – காதல் தோல்வி காரணமா?


தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை நாக ஜான்சி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை நாக ஜான்சி. 21 வயதாகும் இவர் ‘பவித்ரா பந்தன்’ சீரியலில் நடித்தது மூலம் தெலுங்கு மக்களிடையே மிகப் பிரபலமானார். மிகக் குறைந்த காலத்தில் வெளிச்சத்திற்கு வந்த இவர், ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனிடையே நாக ஜான்சியின் சகோதரர் நேற்று அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனையடுத்து வீட்டிற்கு வந்த பார்த்தபோதும் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடிகை நாக ஜான்சி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து நாக ஜான்சியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே நாக ஜான்சிக்கும் அவரின் தூரத்து உறவுக்கார ஆண் ஒருவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் காதலுக்கு நாக ஜான்சியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த நாக ஜான்சி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே நாக ஜான்சியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் கடைசியாக யாருடன் பேசியிருக்கிறார்..? யாருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்..? உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கு செய்தி சேனலில் ஒன்று வேலை செய்து வந்த தொகுப்பாளர் ராதிகா ரெட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றிருந்தார். அதில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். கடும் மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் எனவும், எனது மூளையே எனக்கு எதிரி எனவும் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.Source link

Comment here