சினிமா

தனுஷ் படத்தில் நடிகராக இயக்குநர் பாலாஜி சக்திவேல்?


தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் தனது திரை வாழ்க்கையை‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலம் தொடங்கினார். அத்திரைப்படத்துக்கு நடிகர் தனுஷ் சரியான தேர்வாக இருந்தார். அதற்குப்  பிறகு‘ஆடுகளம்’ படத்தை தனுஷை வைத்து இயக்கினார் வெற்றிமாறன். கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படம் 6 தேசிய விருதைகளை பெற்றது.

தொடர்ந்து தனுஷுடன் வெற்றிமாறன் இணைந்த திரைப்படம் ‘வடசென்னை’. ஒரு இளைஞன் எப்படி கேங்ஸ்ட்ராக உருவாகிறான் என்ற பின்னணியில் இந்தத் திரைப்படம் உருவானது. 

இதையடுத்து ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் வெற்றி மாறனும் தனுஷும் மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கருணாஸின் மகன் கென் கருணாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில், ‘அசுரன்’ படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சாமுராய்’,‘காதல்’,‘கல்லூரி’,‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களை பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here