பிளஸ் 2 ரிசல்ட்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மாணவ, மாணவியரின் சிரமத்தை தவிர்க்க, செல்போன்களில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 9 லட்சம் பேர் செல்போனில் பார்க்க முடியும். பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் எழுதினர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோரில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 837 பேர் மாணவியர். 4 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேர் மாணவர்கள். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்காக 2,434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலை பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354, தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதி உள்ளனர். பள்ளி மாணவர்களை தவிர தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதியுள்ளனர். சென்னையில் 407 பள்ளிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 573 பேர் 145 தேர்வு மையங்களிலும், புதுச்சேரியில் 143 பள்ளிகளை சேர்ந்த 15,660 பேரும் எழுதியுள்ளனர். பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்வு எழுதியோரில் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியோர் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர். தேர்வுப் பணியில் 46 ஆயிரம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்யும் போதே அவர்களின் செல்போன் எண்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று தேர்வுத் துறைக்கு அனுப்பி இருந்தனர். தற்போது, அந்த செல்போன் எண்களுக்கு தேர்வுத்துறையே முடிவுகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 9 லட்சம் மாணவ, மாணவியர் தங்கள் செல்போனில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.  தேர்வு முடிவுகள் வெளியான உடனே மாணவர்களின் செல்போன்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வரும். தேர்வு முடிவுக்காக மாணவர்கள் எங்கும் அலைய தேவையில்லை.

இணையதளங்களில்….

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் முடிந்தன. மே 12ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

தேர்வு முடிவுகளை

www.results.ijmhss.in

www.tnresults.nic.in

ஆகிய இணைய தளங்களில் பார்க்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

About admin25

Check Also

TN Welcomes PM

தினத்தந்தி நாளிதழின் பவள விழாவிற்கு வருகை தந்துள்ள மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை வரவேற்கிறோம். #TNWelcomesModi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *