கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ 

கூகுள் குரோம் தேடுபொறிக்கு போட்டியாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஜியோ ப்ரெளசர்’ என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வருடாங்‌களாக தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திவரும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஜியோ வைஃபை, ஜியோ ஜிகா‌ பைபர் உள்ளிட்ட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துள்ளது. அந்த வகையில் இணையத்தில் எளிமையாகவும், வேகமாகவும் பிரெளசிங் செய்ய ”ஜியோ ப்ரெளசர்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ப்ரெளசிங் இந்தியப் பயனாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோம் உள்ளிட்ட மற்ற ப்ரெளசர்களை போன்றே செய்திகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி என மக்களைக் கவரும் வகையில் ஜியோ ப்ரெளசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌ 

இந்த ப்ரெளசரை உபயோகப்படுத்த ஆண்ட்ராய்டு போன்களுக்கென பிரத்யேகமாக மொபைல் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. 4.8MB அளவு கொண்ட இந்த ப்ரெளசரை கூகுள் ப்ளே மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ ப்ரெளசர் 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும்.

அதன்படி தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகள் அடங்கும். இந்த ஆப் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் அதற்கும் அதிமான திறன் கொண்ட செல்போன்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source link

Check Also

நூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் – டிராய் அதிரடி

விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *