குளிரான புதிய கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகத்தை நாசா ஆய்வு மையம் அனுப்பிய டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதற்கான நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஃபுளோரிடாவின் கேப் கெனரவலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்று இந்தச் செயற்கைக்கோள் ஆராயும் என நாசா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

டெஸ் செயற்கைக்கோள் தன்னுடைய அறிவியல் ஆய்வை ஜூலை மாதம் 25 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே புது கிரகத்தை டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. இது டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்து அனுப்பும் மூன்றாவது கிரகம் ஆகும். இந்தக் கிரகத்திற்கு ஹெச்.டி 21749பி என நாசா பெயரிட்டுள்ளது. 

சுமார் 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிறு நட்சத்திரங்களை கடந்து இதுவரை மூன்று கிரகங்களை டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கிரகம் மற்ற இரண்டு கிரகங்களை ஒப்பிடுகையில் 36 நாட்களில் நிதானமாக நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. 

முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் பூமி 6.3 நாட்களில் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. எல்.ஹெச்.எஸ் 3844பி கிரகம் வெறும் 11 மணிநேரத்தில் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. புதிய கிரகத்தின் மேற்பரப்பு சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ந்த தன்மையில் நட்சத்திரத்திற்கு அருகாமையில் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கிரகம் பூமியை போல மூன்று மடங்கு பெரியது. 

இக்கிரகம் சூரியன் போல பிரகாசமாக உள்ளது எனவும் பிரகாசமான நட்சத்திரப்பகுதியில் உள்ள மிகச் சிறிய கோள் இது எனவும் அமெரிக்க எம்.ஐ.டியின் டையானா ட்ராகோமிர் தெரிவித்துள்ளார். 

மேலும் கிரகங்களின் வளிமண்டலங்கள் குறித்து நமக்கு நன்றாக தெரியும் எனவும் ஆனால், சிறிய அளவிலான கிரகங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் எனவும் தெரிவித்தார். ஏனென்றால் நட்சத்திரங்களிலிருந்து தொலைவில் இருக்கும் வளிமண்டலப் பாதைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால், இந்தச் சிறிய, குளிரான கிரகங்களைப் பற்றி நம்மால் அதிகம் அறிய முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அதிர்ஷ்டவசமாக ஒரு சிறிய குளிரான கிரகம் கிடைத்துள்ளது என டையானா ட்ராகோமிர் தெரிவித்தார்.


Source link

Check Also

நூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் – டிராய் அதிரடி

விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *