கார்கள் விற்பனையில் மாருதி ஸ்விஃப்ட் முதலிடம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை மாருதி ஸ்விஃப்ட் பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 191 கார்களை விற்று மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான டிசயர் 21 ஆயிரத்து 37 என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்தில் உள்ளது.

 

18 ஆயிரத்து 649 கார்களுடன் மாருதி பேலனோ 3வது இடத்தில் உள்ளது.

மாருதியின் ஆரம்ப நிலை காரான அல்டோ 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 4வது இடத்தில் உள்ளது. 

மாருதியின் மற்றொரு காரான விடாரா பிரெஸா 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 5வது இடத்தில் உள்ளது. 

11 ஆயிரத்து 311 விற்பனை எண்ணிக்கையுடன் மாருதி வேகன் ஆர் 6வது இடத்தில் உள்ளது.

விற்பனை எண்ணிக்கையில் முதல் 6 இடங்களையும் மாருதி கார்களே இடம் பெற்றுள்ளன.

10 ஆயிரத்து 555 கார் விற்பனையுடன் ஹுண்டாயின் எலைட் ஐ20 7வது இடத்தில் உள்ளது.


Source link

Check Also

நூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் – டிராய் அதிரடி

விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *