சனிக்கோளின் அழகிய வளையங்கள் படிப்படியாக மறைவு

சனிக்கோள் தன்னுடைய அழகிய வளையங்களை இழந்து வருவதாகவும் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும்‌ மறைந்துவிடும் எனவும்  நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Image result for nasa

சூரியக்குடும்பத்தில் 6 ஆவது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சனிக்கோளுக்கு மேலும் அழகு சேர்ப்பது அந்த கோளின் நடுப்பகுதியை சுற்றி தட்டையாக இருக்கும் வளையம்தான். சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. மற்றக்கோளில் இல்லாது சனிக்கோளில் மட்டு‌மே இருக்கும் இந்த வளையம் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

சனிக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டுள்ள இதில் மிகப்பெரிய நிலவான டைட்டன் புதன் கோளை விடவும் பெரியது எனவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் சனிக்கோள் முற்றிலும்‌ மறைந்துவிடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூற‌கின்றனர். சனியின் வளையங்களில் தூசிகள் படிந்ததால் தன் இந்த பனிக்கட்டிகள் உருகிவருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Source link

Check Also

நூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் – டிராய் அதிரடி

விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *