"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி"

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் செயலாளர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இண்டர்நெட், லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி, தடைபடாத துல்லியமான வீடியோ கால்கள் போன்ற எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகின. 

இந்நிலையில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டை கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. 5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5ஜிக்கு பிறகு தகவல் பரிமாற்றத்தில் வீடியோவின் பங்கே அதிகமாக இருக்கும். சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் பல முக்கிய மைல்கல்லை எட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் செயலாளர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் டிஜிட்டல் தளத்திலான இணைப்புகள் பல மடங்கு அதிகரித்து ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் சுமார் 40 கோடி மக்களுக்கு தரமான இணைய தள சேவை கிடைத்து வருவதாக கூறிய குப்தா, ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு வேகமாக அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source link

Check Also

ஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ – டிசம்பர் 11 வெளியீடு

ஆசஸ் சென்ஃபோன் நிறுவனத்தின் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ மாடல் ஸ்மார்ட்போன்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *