இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம் 

எல்.ஜி. நிறுவனம் டிவியை சுருட்டி வைத்துக்கொள்ளும்படி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. 

பொழுதுபோக்கு உலகில் ஸ்மார்ட் என்ற பெயரில் வரும் அனைத்துமே  புத்தம் புதிய வசதிகளை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் பிரபல டிவி நிறுவனங்கள் புதிய அனுபவத்தையும் அத்தியாயத்தையும் வழங்க உள்ளன. இதில் ‌எல்.ஜி. நிறுவனம் புதிய மாடலாக ஓ.எல்.இ.டி டிவியை புதியதாக வடிவமைத்துள்ளது.

ஆம், சுருட்டி வைத்துக்கொள்ளும் வசதியுடன் கூடிய இந்தப் புதிய மாடல் டிவியை எல்.ஜி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2019ம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் பிரபல நிறுவனமான எல்ஜி, சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய ஓ.எல்.இ.டி மாடல் டி.வி.யை அறிமுகம் செய்யவுள்ளது. இதனை சுவரில் பொருத்தப்படும் டிவியை எளிதாக மடித்து‌ வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். 

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் எல்.ஜி நிறுவனம் இந்த டிவியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது. மேலும் பல புதிய முயற்சிகளை உருவாக்க தொடர்ந்து எல்.ஜி-யின் ஆராய்ச்சி பிரிவு செயல்பட்டு வருகிறது. முன்னணி மின்சாதன நிறுவனங்களான சாம்சங், ஹவாய் ஆகிய நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கிவரும் நிலையில் அதற்கு போட்டியாக எல்‌.ஜி நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த டிவியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source link

Check Also

வெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ – விலை, சிறப்பம்சங்கள்

ஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ வரும் 22ஆம் டெல்லியில் வெளியாகிறது. ஜியோமி நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *