இந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்?

நோக்கியாவின் 7.1 ப்ளஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நோக்கியாவின் 5.1 ப்ளஸ், 6.1 ப்ளஸ் ஏற்கெனவே இந்திய சந்தைகளில் விற்பனையாகி வரும் நிலையில் அடுத்த மாடலான 7.1 ப்ளஸ், அக்டோபர் 4ம் தேதி லண்டனில் நடைபெறும் அறிமுக விழாவில் வெளியாகும் எனவும் அதனைத் தொடர்ந்து  இம்மாத இறுதியில் இந்தியாவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நோக்கியா  7.1 ப்ளஸ் குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் சீனாவின் TENAA இணையதளம் 7.1 ப்ளஸ் குறித்த தகவல்களையும், சில புகைப்படங்களையும் வெளியிட்டது. அதன்படி சீனாவில் நோக்கியா X7 மோனிக்கர் என்ற பெயரில் வெளியாகும் எனவும் இந்தியா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளில் இது நோக்கியா  7.1 ப்ளஸ் என்ற பெயரில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. 

இணையத்தில் வெளியான தகவலின் படி TA-1131 என்ற மாடல் போன், மங்கலான சில்வர் மற்றும் பழுப்பு நிறம் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். 6.18 இன்ச் ஹெச்டி திரை, 2.2 ஆக்டோ கேர் SoC, 4 மற்றும் 6GP, 64 மற்றும் 128 GP இண்டெர்னல் ஸ்டோரேஜ், 13 மெகாபிக்சலில் பின்பக்க கேமரா, 12 மெகா பிக்சலில் முன்பக்க கேமரா, விரல் ரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ ஆகிய சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பம்சங்கள் நோக்கியாவின் 7.1 ப்ளஸ் மாடலிலும் இடம் பெறும் என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. மற்றொரு இணையதளம் வெளியிட்ட தகவலின் படி 7.1 ப்ளஸுக்கு பதிலாக 7 ப்ளஸ் என்ற பெயரில் நோக்கியாவின் அடுத்த போன் வெளியாகும் எனவும் இதன் விலை கிட்டத்தட்ட ரூ.33,700 ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நோக்கியாவின் 5.1 ப்ளஸ், 6.1 ப்ளஸுக்கு அடுத்தப்படியாக நோக்கியா வெளியிடப்போகும் மாடலின் எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் போன் குறித்த அப்டேட்டுக்காக நோக்கியா ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


Source link

Check Also

"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி"

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *