மஹாசிவராத்திரி 2018 நேரடி இணைய ஒளிபரப்பு

View in English

மஹாசிவராத்திரி 2018: பாரத கலாச்சாரத்தில் மக்கள் வாழும் முறையே ஒரு திருவிழாவாக பல பண்டிகைகளால் பின்னப்பட்டு இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்த மஹாசிவராத்திரி இரவு தனித்துவமானது.

புனிதமான இந்த இரவு வருடத்திலேயே இருள் நிறைந்தது. ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையை கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும் வகையில் கோள்களின் அமைப்புகள் துணை செய்கின்றன.

இந்த இரவு முழுவதும் கண் விழித்திருந்து உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம், ஆன்மநலனுக்கு மிக உகந்ததாய் இருக்கிறது.

மாலை 6 மணி முதல்  இணையம் வழியான நேரடி ஒளிபரப்பில் எங்களோடு இணைந்திடுங்கள்!

சத்சங்கம்
தியானம்
இசைநிகழ்ச்சிகள்

மாலை 6 மணி முதல் இரவு முழுவதும்