அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : 8வது படித்தவருக்கும் பணி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 52 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 52 பணிகளுக்கு ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர்கள், உதவி எழுத்தர், அலுவலக உதவியாளர், தச்சர், ப்ளம்பர் மற்றும் எலக்ட்ரிஷியன் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

தொழில்நுட்ப உதவியாளர்களில் மூன்று நிலையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் முதல் நிலை உதவியாளர்கள் பணிக்கு 9 பேர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிஇ அல்லது பிடெக் (சிவில்/எலக்ட்ரானிக்) படித்திருக்க வேண்டும். இரண்டாம் நிலை உதவியாளர்கள் பணிக்கு 2 பேர் எடுக்கப்படவுள்ளனர். இதற்கு எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.காம் அல்லது எம்.எஸ்.சி படித்தவர்கள் தகுதியானவர்கள். மூன்றாம் நிலை உதவியாளர்கள் பணிக்கு டிப்ளமா (சிவில்/வேளாண்மை/எலக்ட்ரிகல்/தொல்லியல்) படித்த 14 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுதவிர உதவி எழுத்தர் பணிக்கு ஏதேனும் பட்டப்படிப்பு படித்த ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதுதவிர லைன் ஆப்ரேட்டர் உதவியாளர்கள் பணிக்கு 8வது படிப்புடன் ஐடிஐ படித்த 15 பேர் எடுக்கப்படுகின்றனர். அத்துடன் தச்சர், ப்ளம்பர், எலக்ட்ரீசியன் ஆகிய உதவியாளர்கள் 3 பேரும், உதவியாளர்களாக மட்டும் 8வது படித்த 8 பேரும் வேலைக்கு எடுப்படவுள்ளனர். இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 26ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பேராசிரியர் மற்றும் எஸ்டேட் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025 என்ற முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை இணைய தளத்தை அனுகலாம். 

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய அண்ணா பல்கழைக்கழக இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் : https://www.annauniv.edu/


Source link

Check Also

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

முதல்வர், துணை இயக்குநர் மற்றும் துணை இன்ஜினியர் ஆகிய பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *