சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு

சென்னையில் நாளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னை, கிண்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இதன்மூலம் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்படவுள்ளது. இதில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், 12ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் பட்டதாரி மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களின் படிப்புத்திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை தேடி வருபவர்கள் தங்கள் சுயவிபர குறிப்பினை எடுத்து வரவேண்டும். அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டோர் இந்த முகாமில் பங்கேற்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் வாய்ப்புகள் உண்டு. 

இடம் : 

ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,

(கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே)

கிண்டி – 600 032. 

             


Source link

Check Also

21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்  

கடந்த 21 ஆண்டுகளில் முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *