10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இனிவரும் காலங்களில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளுக்கு 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல் நிலைத்தேர்வும், அதனைத் தொடர்ந்து 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், அதன் பின்னர் 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதி 3 மாதங்களில் எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 15 நாட்களில் நேர்முகத் தேர்வு நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படப்படும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வா‌ணையத்தில் செயல்பட்டுவரும் மந்த தன்மை கொண்ட துறைகள் மற்றும்‌ பிரிவுகளை கண்காணிப்பு கேமராவின் கீழ் ‌கொண்டுவர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Source link

Check Also

21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்  

கடந்த 21 ஆண்டுகளில் முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *