Technology

5ஜி தொழில்நுட்ப சோதனை : கொத்துக்கொத்தாக மடிந்த குருவிகள்

நெதர்லாந்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடைபெற்ற பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் செத்து மடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் திரைக்கு வந்துள்ள ‘2.O’ திரைப்படம், சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கோபுரங்களும், செல்போன்களும் தான் காரணம் என்கிற மையப்புள்ளியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் படம் பார்த்த அனைவருக்க‌மே எழுந்தது.  ஆனால் செல்போன்களுக்கும், செல்போன் டவர்களுக்கும் சிட்டுக் குருவிகள் மரணத்தில் தொடர்பில்லை என …

Read More »

2 டிஸ்ப்ளேகளுடன் வரும் விவோ ‘நெக்ஸ் 2’

விவோ நிறுவனத்தின் புதிய மாடலான ‘நெக்ஸ் 2’ ஸ்மார்ட்போன் இரண்டு டிஸ்ப்ளேகளுடன் வெளியாகவுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அதிகவேகமாக சென்றுகொண்டிருக்கிறது. மற்ற நவீன சாதனங்களுடன் ஒப்பிடுகையில் செல்போன் என்பது இதில் இமாலய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரு மனிதனை ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் முடக்கிப்போடுவதற்கு ஒரு ஸ்மார்ட்போன் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்களின் நேரத்தை ஸ்மார்ட்போன்களும், கேம்களும் 80% எடுத்துக்கொள்கின்றன. ஸ்மார்ட்போன்களின் …

Read More »

“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..!

இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது. பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் மூலம், இணையதள வேகம் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட GSAT 6A செயற்கைகோள் கண்காணிப்பு …

Read More »

பணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் – ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடையே பணம் அனுப்புதல் மற்றும் பெறும் சேவையை வழங்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தனது 20 கோடி வாடிக்கையாளர்களுக்கு பணப்பட்டுவாடா சேவை வழங்க ஒப்புதல் தருமாறு வாட்ஸ்அப் நிறுவன தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் ரிசர்வ் வங்கிக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.  முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் பணப்பட்டுவாடா …

Read More »

மீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்… கவுன்ட் டவுன் தொடக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்காக, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் புறப்படுவதற்கு கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த விண்கலத்தின் அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே குதித்து அதில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர். இந்தத் தோல்வியை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் …

Read More »

‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ – ட்ராய் கிடுக்கிப்பிடி

குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங் கால்களை நிறுத்தக்கூடாது என சிம் நிறுவனங்களை ட்ராய் எச்சரித்துள்ளது. இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களாக ஏர்டெல், வோடாஃபோன், ஏர்செல் மற்றும் ஐடியா ஆகியவை திகழ்ந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்து ஜியோவின் வருகைக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக ஜியோவின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளால் அனைத்து சிம் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் …

Read More »

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

ஹைசிஸ் உட்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்.  இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ‘ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ (ஹைசிஸ்)’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், …

Read More »

‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..

ஹாவாய் நிறுவனத்தின் ‘மேட் 20 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.  ஆப்பிள், சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக தங்கள் நிறுவன ஸ்மார்ட்போன்களையும் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் ஹவாய் நிறுவனம் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘மேட் 20 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.69,990 ஆகும். இது ஆண்ட்ராய்டு 9.0 பெய் …

Read More »

செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்.. புகைப்படம் அனுப்பியது..!

நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இதனை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இன்சைட் விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்தது. 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 26-ஆம் தேதி இன்சைட் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். …

Read More »

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் !

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 29 ஆம் தேதி 31 ராக்கெட்டுகளுடன் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதில் இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், …

Read More »