Technology

பி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது

புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைகளுடன் பி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன், இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கியது. பிரிட்டனைச் சேர்ந்த சுர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவ னத்திற்குச் சொந்தமான நோவா எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ்.ஒன்.போர் ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களையும் வணிக ரீதியில் இந்திய ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இயற்கைப் பேரிடர், வெள்ள பாதிப்பு, பனிப் படலம் ஆகியவற்றை கண்காணிக்க …

Read More »

வாடகைக்கு ஆண் நண்பர்கள் – அறிமுகமான புதிய அப்

பெண்கள் 2 மணி நேரங்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கலாச்சாரத்தில் தொழில்நுட்பம் என்பது கலாச்சாரத்துடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரங்களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. அதற்கு எடுத்தக்காட்டாகவே ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மியூகல்லி போன்ற அப்கள், மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நிறைகளும் உண்டு. அதற்கு இணையாக குறைகளும் உண்டு. பலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி …

Read More »

வாட்ஸ் அப்பில் வெளியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்

ஃபேஸ்புக் விளம்பரங்களை வாட்ஸ் அப்பில் பகிர அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்றவை உலக அளவில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர் எனக் கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியாவில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்துகின்றது.  வாட்ஸ் …

Read More »

ஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன?

சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி நோட் 9 மாடலை வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறது.  சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி நோட் 9, வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில் தங்கள் புதிய ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 9ஆம் வெளியிடவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் …

Read More »

விண்ணைத்தொட்டவர் விடைபெறுகிறார் !

இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி ஓய்வுப் பெறுகிறார்.  கடந்த 36 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை 2005 ஆம் ஆண்டு முதல் அம்மையத்தின் இயக்குநராக உள்ளார். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., ஜிசாட், ஆஸ்ட்ரோசாட், கார்ட்டோசாட், இன்சாட் வரிசையில் 30 செயற்கைக்கோள்களை வடிவமைத்து செலுத்தும் பணியில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.  கோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தில் ‌1958 ஆம் …

Read More »

மூன்று மணி நேரம் சந்திரகிரகணம் ! அதிசயித்து வியந்த பொது மக்கள்

வான்வெளியில் நேற்று அரிய காட்சியாக, நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இரவில் நிகழ்ந்தது. சரியான நேர்கோட்டில் அமைந்த சந்திரகிரகணம் சுமார் 3 மணி நேரத்திற்க்கு மேல் நீடித்தது. வானில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிசயமானவை, அப்படி ஒரு அதிசயம் நேற்று நிகழ்ந்தது. ஆம் அது நேற்றைய சந்திரகிரகணம் தான். சூரியன், பூமி, சந்திரன் ‌ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. பொதுவாக சந்திர …

Read More »

நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று…!

எண்ணற்ற அதிசயங்களை தாங்கி நிற்கும் வான்வெளியில் இன்று அரிய காட்சியாக, சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திரகிரகணம் 21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணமாக இரவில் நிகழவுள்ளது. வானில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிசயமானவை. அப்படி ஒரு அதிசயம் இன்று நிகழப் போகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணத்தை காண பலர் ஆர்வமுடன் உள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ‌ஒரே நேர் கோட்டில் வரும் …

Read More »

செவ்வாய் கிரகத்தில் ஏரி : தரைக்கு கீழ் வாழும் உயிரினங்கள் ?

செவ்வாயில் மிகப்பெரிய ஏரி இருப்பதற்கான ஆதாரங்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கிறது. செவ்வாயின் தென் துருவத்தில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழே நீர் ஏரி இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இது சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள் இந்த இந்த ஏரியைக் கண்டுபிடித்திருக்கிறது. இது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் கொண்டிருக்கலாம் …

Read More »

இனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..!

ஒரு தகவலை அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில் வாட்சப் புதிய சோதனையை மேற்கொண்டுள்ளது. வதந்தி பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வாட்சப் மேற்கொண்டு வருகிறது. வாட்சப்பில் பரவும் வதந்தியால் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கும்பலின் தாக்குதலால் எந்தவித குற்றமும் புரியாதவர் கூட பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முழு முதற் காரணம் வாட்சப்பில் பரப்பப்படும் வதந்திதான். எனவே …

Read More »

பெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்

மோசடி போன்களில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற ட்ரூகாலர் அப் (App) புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் என்பது தற்போது பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதை தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பாடு என்று தான் கூற வேண்டும். உலகில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதைவிட வேகமாக தொழில்நுட்ப நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் தொலைபேசி அழைப்பு மூலம் மோசடி, உரிமையாளருக்கு தெரியாமலே வங்கிக் …

Read More »